இலங்கை வந்தடைந்தார் இந்திய இராணுவத் தளபதி - News View

Breaking

Tuesday, October 12, 2021

இலங்கை வந்தடைந்தார் இந்திய இராணுவத் தளபதி

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாராவன 5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (12) இலங்கை வந்துள்ளார்.

பாதுகாப்பு படைகளின் தளபதி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் அழைப்பினை ஏற்று அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, பாதுபாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் முப்படைகளின் தளபதி ஆகியோரை இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் சந்திக்கவுள்ளார்.

இதேவேளை, இந்திய இராணுவத் தளபதி இந்திய - இலங்கை மித்ரசக்தி இராணுவ பயிற்சியின் இறுதி பயிற்சியையும் கண்காணிக்கவுள்ளார்.

No comments:

Post a Comment