நாட்டின் தற்போதைய நிலை தேர்தல் ஒன்றுக்கு பொருத்தமான சூழலாக இல்லை : மாகாண சபைத் தேர்தல் அரசாங்கத்துக்கு எந்த வகையிலும் சவாலாக அமையாது - ராெஷன் ரணசிங்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 12, 2021

நாட்டின் தற்போதைய நிலை தேர்தல் ஒன்றுக்கு பொருத்தமான சூழலாக இல்லை : மாகாண சபைத் தேர்தல் அரசாங்கத்துக்கு எந்த வகையிலும் சவாலாக அமையாது - ராெஷன் ரணசிங்க

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் தற்போதைய நிலைமையில் தேர்தல் ஒன்றுக்கு பொருத்தமான சூழல் இல்லை. என்றாலும் மாகாண சபைத் தேர்தல் அரசாங்கத்துக்கு எந்த வகையிலும் சவாலாக அமையப் போவதில்லை என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ராெஷான் ரணசிங்க தெரிவித்தார்.

மாகாண நிறுவனங்கள் தொடர்பான இலங்கை நிறுவனத்தின் புதிய பணிப்பாளர் சபை கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு நேற்று மாகாண நிறுவனங்கள் தொடர்பான இலங்கை நிறுவனத்தில் இடம்பெற்றது. நிழ்வின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருக்கின்றது. ஜனாதிபதியும் இது தொடர்பாக தெரிவித்திருக்கின்றார். என்றாலும் தற்போதுள்ள தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு புதிய தேர்தல் முறைமையில் தேர்தலுக்கு செல்லவதற்கே நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அது தொடர்பில் அனைத்து கட்சிகளின் கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு, தேர்தல் வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளவதோடு, அனைவரும் உகந்த தேர்தல் முறைமை ஒன்றை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

அத்துடன் 13ஆம் திருத்தத்தில் உள்ளடக்கி இருக்கும் மாகாண சபை தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமல் பிற்போட்டது நல்லாட்சி அரசாங்கத்திலாகும். அவர்கள் இதில் மேற்கொண்ட சிக்கலை அவில்க்கவே நாங்களும் முயற்சிக்கின்றோம். ஜனநாயகத்தை மதிக்கும் அரசாங்கம் என்ற வகையில் எந்த வேளையிலும் நாங்கள் மக்களுக்கு தேர்தல் ஒன்றை வழங்க தயாராக இருக்கின்றோம்.

மாகாண சபை செயலிழந்து நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள்தான் ஆகின்றன. அதற்கு முன்பிருந்தே மாகாண நிறுவனங்கள் செயலிழந்திருந்தன. என்றாலும் ஜனாதிபதி மாகாணங்களின் அதிகாரங்களை ஆளுநருக்கு வழங்கி, மாகாண சபைகளால் மக்களுக்கு இடம்பெறும் சேவைகளை தொடர்ந்து மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றார்.

என்றாலும் நாடு கொவிட் தொற்று நிலைமைக்கு முகம்கொடுத்துள்ள நிலையில் சுகாதார பிரிவினர் திருமண நிகழ்வை நடத்துவதற்குகூட குறைந்த கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் நிலையில், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அனுமதிக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. என்னை பொருத்தமட்டில் தேர்தல் ஒன்றுக்கு செல்வதற்கான சூழல் இல்லை.

என்றாலும் கொவிட் நிலைமையில் பொருட்களின் விலை அதிகரிப்பை பயன்படுத்திக் கொண்டு, தேர்தலில் அரசாங்கத்துக்கு பெரும் சவாலை ஏற்படுத்த எதிர்க்கட்சி முயற்சிக்கின்றது. என்றாலும் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால் மாகாண சபை தேர்தல் இடம்பெற்றாலும் அது அரசாங்கத்துக்கு எந்த வகையிலும் சவாலாகப்போவதில்லை என்றார்.

அத்துடன் பொருட்களின் விலை அதிகரிப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். கொவிட் காரணமாக இந்த பிரச்சினை உலகளாவிய நாடுகளிலும் இருக்கின்றது. என்றாலும் இதனை கட்டுப்படுத்த தேவையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றதை மக்களுக்கு தெரிந்து கொள்ள முடியும். அதனால் மாகாண சபை தேர்தல் எங்களுக்கு எந்த வகையிலும் சவாலாகப்போவதில்லை என்றார்.

No comments:

Post a Comment