(இராஜதுரை ஹஷான்)
மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எதிர்வரும் 21 ஆம் திகதி தளர்த்தப்பட்டதும் மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் புகையிரத பொது போக்கு வரத்து சேவை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மீள ஆரம்பிக்கப்படும் என போக்கு வரத்து மற்றும் சமூதாய பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துககொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மாகாணத்திற்குள் போதுமான அளவு பஸ் சேவையில் ஈடுபடவில்லை. கடந்த காலங்களில் தொடர்ந்து நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காரணத்தினால் பஸ் சேவையாளர்கள் வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் பஸ் சேவையில் ஆளணி பற்றாக்குறை காணப்படுகிறது.
மாகாணங்களுக்கிடையில் பொது போக்கு வரத்து சேவையினை மீள ஆரம்பிப்பதில் தனியார் பஸ்களில் பற்றாக்குறை காணப்படுகிறது.
அரச பஸ்கள் மாகாணங்களுக்குள் மாத்திரம் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய சேவையில் ஈடுபடுகின்றன ஆகவே பொதுமக்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
புகையிரத போக்கு வரத்து சேவையினை மீள ஆரம்பிப்பதில் சுகாதார மட்டத்தில் ஒரு சில பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றிற்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. என்றார்.
No comments:
Post a Comment