40 ஆயிரம் ஆப்கானிஸ்தானியர்களுக்கு புகலிடம் வழங்கும் கனடா : ஏனைய நாடுகளையும் வலியுறுத்தும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ - News View

Breaking

Wednesday, October 13, 2021

40 ஆயிரம் ஆப்கானிஸ்தானியர்களுக்கு புகலிடம் வழங்கும் கனடா : ஏனைய நாடுகளையும் வலியுறுத்தும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் அலை அலையாக அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில், 40,000 ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றுக் கொள்வதாக கனேடிய அரசாங்கம் கூறியுள்ளதுடன் அகதிகளை மீளக் குடியமர்த்துவதற்கான ஆதரவை அதிகரிக்குமாறு ஏனைய நாடுகளை கனடா வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "கனடா 40,000 ஆப்கான் அகதிகளை வரவேற்கிறது, அகதிகளை பாதுகாப்பாக மீளக் குடியமர்த்துவதற்கு தங்கள் ஆதரவை அதிகரிக்குமாறு மற்றவர்களை நாங்கள் வலியுறுத்துகிறோம்“ என பதிவிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து ஜி 20 தலைவர்களுடன் பிரதமர் ட்ரூடோ உரையாடிய பிறகு இதனை தெரிவித்துள்ளார்.

"இன்று, நான் ஜி 20 தலைவர்களுடன் ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து பேசினேன். உலக சமூகம் பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது.

மேலும் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவியை அணுகுவதை உறுதி செய்ய நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என பிரதமர் தொடர்ந்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கைப்பற்றிய பிறகு பொருளாதார நெருக்கடியில் மூழ்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லைகளுக்கு வெளியே தஞ்சம் புகுந்த ஆப்கானியர்களின் நிலைமை குறித்து நிச்சயமற்ற நிலை நிலவுவதால், நாட்டில் மனிதாபிமான நெருக்கடி நிலவுவதாக சர்வதேச சமூகங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment