ஒரே வாரத்தில் 2ஆவது முறையாக சேவையில் மீண்டும் தடங்கல் - மன்னிப்பு கோரியது பேஸ்புக் - News View

Breaking

Sunday, October 10, 2021

ஒரே வாரத்தில் 2ஆவது முறையாக சேவையில் மீண்டும் தடங்கல் - மன்னிப்பு கோரியது பேஸ்புக்

பேஸ்புக் நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்கள், வட்ஸ்அப், மெசஞ்சர் செயலிகள் கடந்த திங்கட்கிழமை உலகளவில் முடங்கின. 6 மணி நேரத்துக்கு பின் இந்த முடக்கம் சரி செய்யப்பட்டது.

இந்நிலையில் ஒரே வாரத்தில் 2ஆவது முறையாக நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மீண்டும் சில இடங்களில் பேஸ்புக் வலைத்தள சேவைகளில் தடங்கல் ஏற்பட்டது. 

அது குறித்து பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், எங்கள் செயலிகள், தயாரிப்புகளை பயன்படுத்துவதில் பயனாளர்கள் சிலருக்கு சிரமம் ஏற்பட்டதை அறிகிறோம்.

எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக சேவையை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயல்கிறோம். ஏற்பட்ட தடங்கலுக்கு மன்னிப்பு கோருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment