போராட்டங்களால் முன்கூட்டி நடக்கும் ஈராக் தேர்தல் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 10, 2021

போராட்டங்களால் முன்கூட்டி நடக்கும் ஈராக் தேர்தல்

ஊழல், வேலை வாய்ப்பு, அரசு சேவைகளின் ஒழுங்கின்மை உள்ளிட்டவற்றின் காரணமாக ஈராக்கில் 2019ஆம் ஆண்டு நடந்த மிகப்பெரிய போராட்டங்களுக்கு பிறகு அந்த நாடு முதல்முறையாக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. இன்று (10) அதற்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

போராட்டங்கள் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெற இருந்த நாடாளுமன்ற தேர்தல் தற்போது ஆறு மாதங்களுக்கு முன்கூட்டியே நடத்தப்படுகிறது.

அரசியல் கட்சிகள் மட்டுமே போட்டியிடக் கூடிய ஈராக் தேர்தல் 2019 இல் நடந்த போராட்டங்கள் காரணமாக சுயேச்சை வேட்பாளர்களும் பங்கேற்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

ஓக்டோபர் - டிசம்பர் 2019 இல் நடந்த போராட்டங்களின்போது சுமார் 550 போராட்டக்காரர்கள் நாடு முழுவதும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இம்முறையும் பெரும்பான்மை இனத்தவரான ஷியா முஸ்லிம்களே பெரும்பாலான இடங்களை கைப்பற்றுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் 2003 ஆம் ஆண்டு ஈராக் மீது படையெடுத்த பின்பு சதாம் ஹுசேனின் ஆட்சி அகற்றப்பட்டது.

அப்போதிலிருந்து நடந்த தேர்தல்களில் ஷியா முஸ்லிம்களே ஈராக் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment