25 ஆண்டுகளுக்கு பின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டார் டொனால்ட் ட்ரம்ப் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 7, 2021

25 ஆண்டுகளுக்கு பின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டார் டொனால்ட் ட்ரம்ப்

25 ஆண்டுகளுக்கு பின், அமெரிக்காவின் 400 செல்வந்தர்கள் பட்டியிலிலிருந்து முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை போப்ஸ் சஞ்சிகை நீக்கியுள்ளது.

ஓராண்டுக்கு முன்பிருந்த அதே சொத்து மதிப்பை ட்ரம்ப் கொண்டுள்ளதாகவும் ஆனால், கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்ததில் இருந்து அவரின் சொத்து மதிப்பு 600 மில்லியன் டொலர்கள் குறைந்துள்ளதாகவும் அந்த சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

ட்ரம்பின் சொத்து மதிப்பு 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக கணக்கிடப்பட்டுள்ளது. 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் குறைவாக உள்ளதால் அவரால் அமெரிக்க செல்வந்தர்கள் பட்டியலில் இடம்பெற முடியவில்லை.

இது குறித்து போப்ஸ் வெளியிட்ட செய்தியில், “அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது அவருக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. தேர்தல் முடிந்தவுடன் ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்றுவிடுமாறு அலுவலர்கள் அவரை வற்புறுத்தியுள்ளனர். 

இதன் மூலம் அவரால் மியூச்சுவல் பண்ட்டில் மீண்டும் முதலீடு செய்திருக்க முடியும். அதேபோன்று, ஜனாதிபதி பதவியில் இருந்து கொண்டே நிறுவனத்தை நடத்தியிருக்கலாம்.

இதில் ட்ரம்ப் யாரையாவது குறை கூற வேண்டும் எனில் அவரில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment