நாட்டு மக்கள் எம்மிடம் 'தெங் செபத' என்று நகைச்சுவையாக கேட்கிறார்கள் - முருந்தெட்டுவே ஆனந்த தேரர் - News View

Breaking

Tuesday, October 5, 2021

நாட்டு மக்கள் எம்மிடம் 'தெங் செபத' என்று நகைச்சுவையாக கேட்கிறார்கள் - முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பலவீனமான அரச தலைவர் என்று குறிப்பிட்டால் மக்கள் அதனை முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள். அரசாங்கம் நாட்டை பாதுகாக்க வந்துள்ளதா, அழிக்க வந்துள்ளதா என்று எண்ண தோன்றுகிறது. கொவிட் வைரஸ் தாக்கம் இல்லாமலிருந்தால் நாட்டு மக்கள் வீதிக்கிறங்கி அரசாங்கத்திற்கு எதிராக போராடுவார்கள். நாட்டை பாதுகாக்க சர்வ மதத் தலைவர்களையும் ஒன்றினைத்து சம்மேளனத்தை நடத்த தீர்மானித்துள்ளோம் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவரும், அபயராம விகாரையின் விகாராதிபதியுமான முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அபயராம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் நாட்டை முன்னேற்றுகிறதா, அழிக்கிறதா என்று எண்ண தோன்றுகிறது. ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் அவர்களுக்குள் முரண்பட்டுக் கொள்கிறார்கள்.

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்பட்ட அரச தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருதப்படுகிறார்.

நாட்டு மக்கள் எம்மிடம் 'தெங் செபத' என்று நகைச்சுவையாக கேட்கிறார்கள். மக்களின் விமர்சனங்களுக்கு இன்று உள்ளாகியுள்ளோம். கொவிட் தாக்கம் மாத்திரம் இல்லாமிருந்தால் மக்கள் எந்நாளும் வீதிக்கிறங்கி போராடுவார்கள்.

விவசாயிகள் உரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள போது பொலன்னறுவை மாவட்டத்தில் பராக்கிரம சமுத்திரத்தை அண்மித்து பல பில்லியன் செலவில் நடைபாதை நிர்மானிக்கப்படுகிறது.

இதன் பயன் யாருக்கு இவ்விடயத்தில் அரசியல்வாதிகள் பௌத்த மதத் தலைவர்களையும் பிறிக்கிறார்கள். அத்துடன் நாட்டையும் பிரிக்கிறார்கள், இனங்களையும் பிரிக்கிறார்கள். நாட்டை பாதுகாக்க மகாநாயக்க தேரர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment