இன்று (11) நள்ளிரவு முதல் பாண் விலையும் அதிகரிப்பு - News View

Breaking

Monday, October 11, 2021

இன்று (11) நள்ளிரவு முதல் பாண் விலையும் அதிகரிப்பு

ஒரு இறாத்தல் (450g) பாணின் விலையை இன்று நள்ளிரவு முதல் ரூ. 5 இனால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோதுமை மா மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இம்முடிவை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாணின் விலை அளவைப் பொறுத்து ரூபா 60 தொடக்கம் 100 வரை விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பாட்டு விலை நீக்கத்தை தொடர்ந்து, இன்று முதல் 10 ரூபாவினால் கோதுமை மாவின் விலைகளை அதிகரிப்பதாக கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களின் ஒன்றான செரண்டிப் நிறுவனம் அறிவித்திருந்தது.

ப்ரிமா நிறுவனம் இதுவரை கோதுமை மா விலைகள் தொடர்பில் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமையல் எரிவாயுவின் விலைகளும் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்கத்கது.

இந்நிலையிலேயே ஒரு இறாத்தல் (450g) பாணின் விலையை ரூபா 5 இனால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள் தொடர்பில் இதுவரை எவ்வித அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை.

அத்துடன், நாளை (12) முதல் சோற்று பார்சல், கொத்து பார்சல், பால் தேநீர், பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகளை ரூ. 10 இனால் அதிகரிக்க, சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாக அச்சங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment