கொரோனா 10 கோடி மக்களை வறுமைக்கு தள்ளியுள்ளது : ஐ.நா. பொதுச் செயலாளர் வேதனை - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 13, 2021

கொரோனா 10 கோடி மக்களை வறுமைக்கு தள்ளியுள்ளது : ஐ.நா. பொதுச் செயலாளர் வேதனை

உலகம் 5 முதல் 6 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் பொருளாதார மீட்பின் மத்தியில் இருந்தாலும் கூட, வளர்ந்து வரும் நாடுகள் பலவும் பின்தங்கி உள்ளன.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக இன்னும் உலக நாடுகள் போராடிக் கொண்டிருக்கின்றன. 

இந்த தருணத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சர்வதேச நிதியம் நேற்று முன்தினம் நடத்திய கொரோனா தொடர்பான நிகழ்ச்சியில் ஐ.நா. சபை பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர், “கொரோனா வைரஸ் பெருந்தொற்று 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வறுமையில் தள்ளிவிட்டது. 400 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு சமூக ஆதரவு குறைவாக உள்ளது அல்லது இல்லை. சுகாதார பராமரிப்பு இல்லை. அவசரமாக தேவைப்படும்போது வருமான பாதுகாப்பு இல்லை” என கூறினார்.

மேலும், “உலகம் 5 முதல் 6 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் பொருளாதார மீட்பின் மத்தியில் இருந்தாலும்கூட, வளர்ந்து வரும் நாடுகள் பலவும் பின்தங்கி உள்ளன. 

வலுவான பொருளாதார நாடுகள் மீட்புக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28 சதவீத அளவுக்கு மீட்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளன. ஆனால் குறைவான வளர்ச்சி அடைந்த நாடுகள், சராசரியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8 சதவீதம்தான் முதலீட்டுக்காக ஒதுக்க முடியும்” எனவும் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment