நவம்பர் 08 ஆம் திகதி விசேட பாராளுமன்றம் : 50 வினாக்களுக்கு அரசினால் பதில் - News View

About Us

About Us

Breaking

Friday, October 22, 2021

நவம்பர் 08 ஆம் திகதி விசேட பாராளுமன்றம் : 50 வினாக்களுக்கு அரசினால் பதில்

நவம்பர் 08 ஆம் திகதி விசேட பாராளுமன்ற தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் பதில் வழங்க முடியாமல்போன 50 வினாக்களுக்கு பதிலளிக்க சந்தர்ப்பம் வழங்குவதற்காக இந்த விசேட பாராளுமன்ற தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (21) கூடிய பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழுவில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் பாராளுமன்றத்தில் தலா 02 கேள்விகளை முன்வைத்து பதிலை பெற்றுக் கொள்வதற்காக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment