2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்தில் நெதர்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியுடன் இலங்கை தனது தகுதிச் சுற்று போட்டிகளை நிறைவுக்கு கொண்டுவரவுள்ளது.
அதன்படி இப் போட்டியானது இன்றிரவு 7.30 மணிக்கு சார்ஜாவில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை 2021 ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணத் தொடரில் மிகப்பெரிய அழுத்தத்திலிருந்து விடுபட்டுள்ளது.
தகுதிச் சுற்றில் 12 முன்னணி அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் பங்கெடுப்பதற்காக, இலங்கை சர்வதேச அனுபவம் இல்லாத அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் நமீபியா ஆகியவற்றுக்கு எதிராக விளையாடி வருகிறது.
தகுதிச் சுற்றில் நமீபியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 7 விக்கெட்டுகளினாலும், அயர்லாந்துடனான இரண்டாவது போட்டியில் 70 ஓட்டங்களினாலும் வெற்றி பெற்று சூப்பர் 12 சுற்றை அடைந்துள்ளது இலங்கை.
நெதர்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியின் முடிவு எதுவாக இருந்தாலும், போனஸ் புள்ளிகள் அட்டவணையில் இலங்கைக்கு சவால் விடுவதில் சிக்கல் இல்லை.
அதேநேரம் நெதர்லாந்து அணி மாத்திரம் குழு ஏ யில் தான் எதிர்கொண்ட இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது.
எனவே இப் போட்டியில் வெற்றி பெற்றாலும் அது சூப்பர் 12 சுற்றுக்கான வாய்ப்பினை நெதர்லாந்துக்கு வழங்காது.
No comments:
Post a Comment