கட்டுநாயக்க விமான நிலைய PCR பரிசோதனை கூடம் 20 இல் திறப்பு; தினமும் 7000 பரிசோதனை - News View

Breaking

Tuesday, September 14, 2021

கட்டுநாயக்க விமான நிலைய PCR பரிசோதனை கூடம் 20 இல் திறப்பு; தினமும் 7000 பரிசோதனை

கட்டுநாயக்க விமான நிலைய வளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன பிசிஆர் பரிசோதனை கூடம் எதிர்வரும் 20 ஆம் திகதி திறக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

இப்பரிசோதனைக் கூடத்தை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்றையதினம் நேரில் சென்று பார்வையிட்டார். 

இப்பரிசோதனைக் கூடத்தில் தினமும் 7000 பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சுமார் மூன்று மணித்தியாலங்களில் அவர்களுக்கு பரிசோதனை அறிக்கை விநியோகிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டு இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிசிஆர் பரிசோதனை மூலம் கொரோனா வைரஸ் நோயாளி அல்ல என்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் எந்த தடையுமின்றி நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment