சுமார் 10 கிலோ ஐஸ் போதைப் பொருளை கடல் வழியாக கடத்த முற்பட்ட நால்வர் இலங்கை கடற்படையால் கைது - News View

Breaking

Tuesday, September 14, 2021

சுமார் 10 கிலோ ஐஸ் போதைப் பொருளை கடல் வழியாக கடத்த முற்பட்ட நால்வர் இலங்கை கடற்படையால் கைது

ரூ. 79 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான 9.914 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளை கடல் வழியாக கடத்தி கொண்டு வர முற்பட்ட 4 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

தலைமன்னார், ஊருமலை கடற்கரை பகுதியில் நேற்று நள்ளிரவு மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இக்கைது இடம்பெற்றுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

ஊருமலை கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்றை சோதனையிட்ட கடற்படையினர், 10 பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் தொகுதியை மீட்டுள்ளனர்.

கைதான சந்தேகநபர்கள், 28, 37 வயதுடைய தலைமன்னார் ஊருமலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களுடன் குறித்த போதைப் பொருள், டிங்கி படகு உள்ளிட்டவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment