கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறுகிய காலத்தில் சீர்செய்ய அரசு முயற்சி - மக்களது பாதுகாப்புடன் பாடசாலைகள் விரைவில் மீளத் திறப்பு என்கிறார் சுசில் பிரேமஜயந்த - News View

About Us

About Us

Breaking

Monday, September 13, 2021

கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறுகிய காலத்தில் சீர்செய்ய அரசு முயற்சி - மக்களது பாதுகாப்புடன் பாடசாலைகள் விரைவில் மீளத் திறப்பு என்கிறார் சுசில் பிரேமஜயந்த

கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறுகிய காலத்துக்குள் சீர் செய்வதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்றிட்டத்துக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தொலைநோக்கு கல்வி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.

நாடு தழுவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய திறக்க முடியுமா என்பது குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக கல்வித்துறையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டிலிருந்து மாணவர்களின் கற்றல் நிலை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

இணையவழி முறைமை ஊடாக ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். ஆசிரியர் - அதிபர் சேவையில் நிலவும் வேதன பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொள்ளும் வரை ஒன்லைன் முறைமை ஊடான கற்பித்தலில் ஈடுப்பட போவதில்லை என ஆசிரியர்கள் உறுதியாகவுள்ளார்கள்.

இவ்வாறான நிலையில் மாணவர்களின் கல்வி நிலையை கருத்திற் கொண்டு தொலைநோக்கு முறைமை ஊடாக கற்றல் நிகழ்ச்சிகள் அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி சேவையில் ஒளிப்பரப்பு செய்யப்படுகின்றன. 

அத்துடன் இவ்வருடம் நடைபெறவுள்ள தேசிய பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்காக விசேட கற்பித்தல் நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகின்றன.

உள்ள ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி தளர்த்துவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

ஆகவே எதிர்வரும் மாதம் நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் திறப்பது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

கொவிட்-19 தாக்கத்தினால் கல்வித்துறைக்கு பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளன. இச்சவால்களை வெற்றிகொள்ள புதிய கொள்கை வகுப்பது அவசியமாகும் என்றார்.

No comments:

Post a Comment