கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் இறப்பதற்கான வாய்ப்பு அதிகமாகும் - அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலைய ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது - News View

About Us

About Us

Breaking

Monday, September 13, 2021

கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் இறப்பதற்கான வாய்ப்பு அதிகமாகும் - அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலைய ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

தடுப்பூசி ஏற்றியவர்களை விட தடுப்பூசி ஏற்றாதவர்கள் 11 மடங்கு அதிகமாக கொவிட்-19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் இறப்பதற்கும் வாய்ப்புள்ளதாக சிடிசி நிலையப் பணிப்பாளர் ரோஷெல் வாலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கடுமையான நோய் அல்லது இறப்புக்கு எதிராக கொவிட்-19 தடுப்பூசிகளின் செயல்திறனை தெளிவாகக் காட்டும் ஒரு புதிய ஆய்வை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் வெளியிட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்கும் மேலாக கொவிட்-19 தொற்றினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களை ஆய்வு செய்ததில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

டெல்டா வைரஸ் நாடு முழுவதும் பரவி வருகிறது. கோடை காலப்பகுதியில் அமெரிக்காவில் டெல்டா பரவலாக இருந்ததால், ஆரம்ப நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவது சற்று வீழ்ச்சியடைந்ததென்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

ஆனால் தடுப்பூசி ஏற்றலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது மற்றும் இறப்பு என்பன சரிவையும் காட்டியதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. பல ஆய்வுகள் தடுப்பூசி ஏற்றலினால் செயல்திறன் அதிகரிப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. 

அமெரிக்காவில் மொடர்னா, பைசர், பயோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் என்பன ஏற்றப்படுகின்றன. இவை கோவிட்-19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தடுப்பதில் 86 சதவிகிதம் பங்களிக்கிறது.

அதே போன்று அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதை தடுப்பதில் 82 சதவிகிதம் பங்களிக்கிறது. ஆய்வின் முடிவுகளின்படி ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதிலிருந்து 60 சதவிகித பாதுகாப்பை வழங்குகிறது.

95 சதவிகிதம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தடுக்க மொடர்னா பங்களிக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் அமெரிக்கர்கள் ஏனைய செல்வந்த நாடுகளை விட பின்தங்கியுள்ளனர். தடுப்பூசி ஏற்றத் தகுதியான அமெரிக்கர்களில் 52.76 சதவீதமானவர்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி ஏற்றியுள்ளனர். 

அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் சுமார் 7,00,000 தடுப்பூசி ஏற்றப்படுகிறது. ஜப்பானின் சிறிய மக்கள் தொகை இருந்தபோதிலும், அங்கு தினமும் 300,000 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்படுகிறது.

தற்போது, அமெரிக்காவில் ஒரு நாளைக்கு 1, 46,000 புதிய கோவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

No comments:

Post a Comment