தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டால் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலை போன்ற பிறிதொரு அடிப்படைவாத தாக்குதல் இடம் பெறலாம். ஆகவே பாதுகாப்பை பலப்படுத்துமாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞாசனார தேரர் குறிப்பிட்டாரே, தவிர குண்டுத் தாக்குதல் நிச்சயம் நடத்தப்படும் என்று உறுதியாக குறிப்பிடவில்லை என பொதுபலசேனா அமைப்பின் ஊடக பிரிவு குறிப்பிட்டது.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலை போன்று மற்றுமொரு குண்டுத் தாக்குதல் இடம்பெற போவதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் ஒருபோதும். குறிப்பிடவில்லை. குறிப்பிடாத விடயம் ஊடகங்களினால் திரிபுப்படுத்தப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்க ஞானசார தேரர் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்.
இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் தடை செய்யப்பட வேண்டும் என்பதை அவர் ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக வலியுறுத்தியுள்ளார், என பொதுபலசேனா அமைப்பின் ஊடாக பிரிவி குறிப்பிட்டது.
No comments:
Post a Comment