அமைச்சரவை உத்தியோகபூர்வ அந்தஸ்துடன் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட மிலிந்த மொரகொட ஜனாதிபதியிடம் தனது சான்றிதழை கையளித்தார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 22, 2021

அமைச்சரவை உத்தியோகபூர்வ அந்தஸ்துடன் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட மிலிந்த மொரகொட ஜனாதிபதியிடம் தனது சான்றிதழை கையளித்தார்

அமைச்சரவை உத்தியோகபூர்வ அந்தஸ்துடன் இந்தியாவின் இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட மிலிந்த மொரகொட நேற்று (22) புதுடில்லியில் இந்திய ஜனாதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்திடம் தனது சான்றிதழ் பத்திரங்களை கையளித்தார்.

கொவிட்19 தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட சம்பிரதாயங்களின் படி சான்றிதழ் பத்திரம் கையளிக்கும் நிகழ்வு இந்திய வெளிநாட்டு விவகார அமைச்சில் வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெற்றது. 

இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனிலிருந்து வெளிவிவகார அமைச்சிலிருந்து தொடர்பு கொண்டு இந்திய ஜனாதிபதியிடம் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தனது சான்றிதழ் பத்திரத்தை கையளித்தார்.

சான்றிதழ் பத்திரங்களை கையளித்த பின்னர், உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வாழ்த்துக்களையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்துக்கு தெரிவித்தார்.

இந்தியாவுக்கான தூது பணியில் முக்கிய நோக்கம் இரண்டு நாடுகளுக்கும் இடையே காணப்படும் தொடர்புகளை உயர் மட்டத்தில் பேணி அதனை மேலும் வலுப்படுத்துவதாகும் என தெரிவித்தார். 

பாரதம் எமக்களித்த பெறுமதியான பரிசு பௌத்த சமயம் என கூறிய உயர்ஸ்தானிகர், தனது கொள்கையின் பாதையான ஒருங்கிணைந்த இராஜதந்திர சித்தாந்த அடிப்படையாக பின்பற்றுவது புத்தரின் போதனைகளையே என தெரிவித்தார். 

தனது தூது பணியின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளவும், இரு நாடுகளுக்கும் இடையே காணப்படும் பழமையான, காலத்தால் பரிசீலிக்கப்பட்ட மற்றும் பல பரிமாண தொடர்புகளை மேலும் வலுப்படுத்த இந்திய ஜனாதிபதி மற்றும் அரசின் ஒத்துழைப்பை மிலிந்த மொரகொட கேட்டுக்கொண்டார். 

அதற்கு பதிலளித்த இந்திய ஜனாதிபதி கோவிந்த், இந்தியாவின் ‘அண்டைய நாடு முதலில்’ மற்றும் ‘சாகர்’ கொள்கையில் இலங்கைக்கு மிக முக்கிய இடம் அளித்துள்ளதாக தெரிவித்தார். 

இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு, புராதனமான மற்றும் பல்பரிமாண தொடர்புகள் போன்று மிகவும் வலுவான இருதரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்பு பற்றியும் ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வளர்ச்சி அடையும் என தாம் நம்புவதாகவும் இந்திய ஜனாதிபதி தனது வாழ்த்துக்களை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு தெரிவிக்கும் படியும் உயர்ஸ்தானிகரி டம் கேட்டுக்கொண்டார். 

1942 ஆம் ஆண்டு ஸ்ரீமத் பாரோன் ஜயதிலக இந்தியாவின் இலங்கை பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட நாள் தொடக்கம் இதுவரை இந்தியாவின் இலங்கை தூது குழு தலைமைப் பதவிக்கு நியமிக்கப்பட்ட இருபத்தி ஆறாவது உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஆவார் .

No comments:

Post a Comment