நாட்டுக்கு பெளத்தம் பற்றி வகுப்பெடுக்கும் அரசின் வக்கிர மனசு இதுவா? பதிலளிக்க ஜனாதிபதி கடமைப்பட்டுள்ளார் - அனுராதபுர சிறைக்குள் ராஜாங்க அமைச்சரின் நடத்தை பற்றி மனோ கணேசன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 14, 2021

நாட்டுக்கு பெளத்தம் பற்றி வகுப்பெடுக்கும் அரசின் வக்கிர மனசு இதுவா? பதிலளிக்க ஜனாதிபதி கடமைப்பட்டுள்ளார் - அனுராதபுர சிறைக்குள் ராஜாங்க அமைச்சரின் நடத்தை பற்றி மனோ கணேசன்

ஒரு ராஜாங்க அமைச்சர் அனுராதபுர சிறைக்கு சென்று, துப்பாக்கி முனையில், தமிழ் கைதிகளை முழந்தாளிட செய்து அவமானப்படுத்தி, பயமுறுத்தி உள்ளார். இதொரு பாரிய மனித உரிமை மீறல், மனிதர்களின் ஆத்ம கெளவரத்தை அவமானப்படுத்தும் ஒரு செயல், ஒரு கிரிமினல் செயல். பெளத்தம் பற்றி நாட்டுக்கு தினந்தோறும் வகுப்பெடுக்கும் இந்த அரசாங்கத்தின் மிக வக்கிரமான இனவாத மனசை இது காட்டுகிறதா? ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச இதற்கு பதில் கூற வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தனது டுவீடர், முகநூல் தளங்களில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ எம்பியின் அதிகாரபூர்வ டுவீட்டர் மும்மொழிகளிலும் கூறுவதாவது,

Tweet @ManoGanesan
ஒரு ராஜாங்க அமைச்சர் #அனுராதபுர சிறைக்கு சென்று, துப்பாக்கி முனையில், #தமிழ்_கைதிகளை முழந்தாளிட செய்துள்ளார். இதொரு பாரிய #மனித_உரிமை மீறிய கிரிமினல் செயல். #பெளத்தம் பற்றி எமக்கு வகுப்பு எடுக்கும் #LKA அரசின் வக்கிர மனசை இது காட்டுகிறதா? ஜனாதிபதி #கோதா @GotabayaR பதிலளிக்கணும்.

Tweet @ManoGanesan
රාජ්‍ය ඇමත්‍යවරයෙක් #අනුරාධපුර බන්ධනාගාරයට ගොස්, තුවක්කු පෙන්වා, #දමිළ_සිරකරුවන් දණ ගසා තිබෙනවා. මෙය දැවැන්ත #මානව_හිමිකම් උල්ලංඝනය කිරීමේ අපරාධ ක්‍රියාවකි. #බුද්ධාගම පිළිබඳ අපට උගන්වන #LKA රජයේ විකෘති මානසිකත්වය මෙය පෙන්නුම් කරන්නේ ද? ජනාධිපති #ගෝඨා @GotabayaR උත්තර දිය යුතුයි.

Tweet @ManoGanesan
A State Minister entering #Anuradhapura prisons has threatened, #Tamil_Prisoners with pistol by getting them kneeling. It's very serious #human_rights_violation & a criminal act. Is it the mindset of #LKA gov lecturing #Buddhist principles? I call upon Pres @GotabayaR to respond.

No comments:

Post a Comment