இந்த நாட்களில் காய்ச்சல் இருந்தால் ‘டெங்குவாகவும் இருக்கலாம்’ - News View

About Us

About Us

Breaking

Monday, September 6, 2021

இந்த நாட்களில் காய்ச்சல் இருந்தால் ‘டெங்குவாகவும் இருக்கலாம்’

குறிப்பாக, இந்த நாள்களில் காய்ச்சல் காணப்படுமாக இருந்தால் அது டெங்கு காய்ச்சலாக இருக்கக்கூடுமென தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், காலை 6 மணியிலிருந்து 11 வரையிலும், மாலை 03 மணியிலிருந்து இரவு 7 மணி வரையிலும் டெங்கு நுளம்பின் தாக்கம் இருக்கும் எனவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் தெரிவித்தார்.

இந்த நாள்களில், பெரும்பாலானவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதால், டெங்கு நுளம்புகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். 

குழந்தைகளைத் தூங்க வைக்கும்போது, நுளம்பு வலைகளை பயன்படுத்துவது முக்கியம். வீட்டில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் இருக்குமாக இருந்தால், அது டெங்குக் காய்ச்சலாக இருக்கக்கூடும்.

நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவது போல, டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது. 

காய்ச்சல் உள்ளிட்ட டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் அறிவுறுத்தினார

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment