காத்தான்குடி வைத்தியசாலைக்கு இலங்கை இராணுவத்தினரால் ஒக்சிஸன் கருவி கையளிப்பு - News View

Breaking

Monday, September 6, 2021

காத்தான்குடி வைத்தியசாலைக்கு இலங்கை இராணுவத்தினரால் ஒக்சிஸன் கருவி கையளிப்பு

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் கொவிட் சிகிச்சை நிலையத்துக்கு இலங்கை இராணுவத்தினரால் ஒரு ஒக்சிஸன் கருவி (05.09.2021) ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாம் 231 படைப்பிரிவின் பிரிகேடியர் கேர்ணல் துலிப் பண்டார காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீரிடம் இந்த ஒக்சிஸன் கருவி மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளையும் கையளித்தார்.

இந்த நிகழ்வு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நடை பெற்றது. இதில் குருக்கள் மடம் இராணுவ முகாம் இணைப்பதிகாரி ஏ.எம்.டயபிள்யு.உதயகுமார மேஜர் வை.எம்.யு.வி.யாப்பா, கெப்டன் அத்துக்கொரல, இராணு சிவில் பாதுகாப்பு அதிகாரி உட்பட வைத்தியசாலை அதிகாரிகள் தாதியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலை தொடர்பாகவும் கொவிட் சிகிச்சை நிலையம் தொடர்பாக மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாம் 231 படைப்பிரிவின் பிரிகேடியர் கேர்ணல் துலிப் பண்டார காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீரிடம் கேட்டறிந்து கொண்டார்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment