பந்துல தெரிவித்துள்ளமை அவரது தனிப்பட்ட நிலைப்பாடே என்கிறார் டலஸ் - News View

Breaking

Tuesday, September 14, 2021

பந்துல தெரிவித்துள்ளமை அவரது தனிப்பட்ட நிலைப்பாடே என்கிறார் டலஸ்

(எம்.மனோசித்ரா)

ஒரு இலட்சத்திற்கும் அதிக சம்பளத்தைப் பெறுகின்றவர்களுக்கு 5 வீத வரி அறவிடுமாறு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை அவரது தனிப்பட்ட நிலைப்பாடாகும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தனவினால் மேற்குறிப்பிட்டவாறு முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதிகளவு சம்பளத்தைப் பெறுபவர்களுக்கு 5 வீத வரி அறவிடுமாறு முன்வைக்கப்பட்டுள்ள யோசனை அமைச்சர் பந்துல குணவர்தனவின் தனிப்பட்ட யோசனையாகும்.

இந்த யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதோடு, குறைந்தபட்சம் அமைச்சரவையில் கலந்துரையாடலுக்கு கூட உட்படுத்தப்படவில்லை என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad