இலங்கையில் சுற்றுலா பயணிகள் வருகையில் பாரிய வீழ்ச்சி - News View

About Us

About Us

Breaking

Saturday, September 11, 2021

இலங்கையில் சுற்றுலா பயணிகள் வருகையில் பாரிய வீழ்ச்சி

எம்.மனோசித்ரா

நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 5040 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட்டில் ஐரோப்பிய நாடுகளிலிருந்தே 48.1 வீதம் என்றவாறு அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய ஐரோப்பிய நாடுகளிலிருந்து 2425 (48.1%) சுற்றுலா பயணிகளும், ஆசிய மற்றும் பசுபிக் நாடுகளிலிருந்து 1602 (31.8 %) சுற்றுலா பயணிகளும், அமெரிக்காவிலிருந்து 914 (18.1 %) சுற்றுலா பயணிகளும், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 84 (1.7 %) சுற்றுலா பயணிகளும் மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து 15 (0.3 %) சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் தொடக்கம் ஆகஸ்ட் வரை எந்தவொரு சுற்றுலா பயணிகளும் வருகை தராத நிலையில், இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 5040 ஆகக் காணப்படுகின்றமை சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பை காண்பிப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறிருப்பினும் 2020 இல் ஜனவரி - ஆகஸ்ட் வரை 507311 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். எனினும் இவ்வாண்டு குறித்த 8 மாதங்களிலும் 24377 சுற்றுலா பயணிகள் மாத்திரமே வருகை தந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment