சி.ஐ.டி. தலைமையகத்துக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ள மாணவன் - News View

Breaking

Saturday, September 11, 2021

சி.ஐ.டி. தலைமையகத்துக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ள மாணவன்

(எம்.எப்.எம்.பஸீர்)

17 வயதான பாடசலை மாணவன் ஒருவன், கொழும்பிலுள்ள சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்துக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

முகப்புத்தகத்தில் அவரால் இடப்பட்டதாக கூறப்படும் பதிவொன்று தொடர்பில் வாக்கு மூலம் பெற்றுக் கொள்வதற்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

குருணாகலை, வாரியபொல - கும்புக்கெட்டே பகுதியைச் சேர்ந்த 17 வயதான மணவன் ஒருவரே இவ்வாறு எதிர்வரும் 15 ஆம் திகதி சி.ஐ.டி.யில் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளவராவார்.

சாலிய கனுகல எனும் குறித்த மாணவன் மிஹியா எனும் பெயரைக் கொண்ட தனது முகப்புத்தக பதிவில் இட்ட பதிவொன்று தொடர்பிலேயே இவ்வாறு விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

No comments:

Post a Comment