இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க முன்வைத்துள்ள கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 1, 2021

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க முன்வைத்துள்ள கோரிக்கை

(எம்.எம்.சில்வெஸ்டர்)

தென் ஆபிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களை முகங்கொடுப்பதற்கு எம்மை தயார்படுத்திக் கொள்வதாயின் எமது அணியிலும் மணிக்கு 145 கிலோ மீற்றர் வேகத்தில் பந்து வீசக்கூடிய விசேட வேகப்பந்து வீச்சாளர்கள் இருவர் தேவை என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரான தசுன் ஷானக்க ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள தென் ஆபிரிக்க அணிக்கெதிராக தலா 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் சர்வதேச இருபதுக்கு 20 தொடர் ஆகியவற்றில் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடவுள்ளது.

இது குறித்து தசுன் ஷானக்க தெரிவித்துள்ளதாவது, "தென் ஆபிரிக்க அணியிலுள்ள காகிஸோ ரபாடா அன்ரிச் நோர்டிஜ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக முகங்கொடுப்பததாயின், நாம் மணிக்கு 145 கிலோ மீற்றர் வேகத்தில் வீசப்படும் பந்துகளுக்கு துடுப்பெடுத்தாடி எம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆகையால், அந்த வேகத்தில் வீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் இருவர் எமக்கு தேவை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்திடம் நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.

இது எமக்கு முக்கியம் வாய்ந்த தொடராகும். அதனால், அதற்கேற்றாற் போல் எம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். உள்நாட்டு போட்டிகளில் நாம் மணிக்கு 120 க்கும் 140 க்கும் இடைப்பட்ட வேகத்தில் பந்து வீசக்கூடிய மித வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். ஆயினும் சர்வதேச போட்டிகளின் தன்மை முற்றிலும் மாறுபட்டதாகும்.

தற்‍போது அநேகமான வேகப்பந்து வீச்சாளர்கள் சர்வதேச போட்டிகளில் மணிக்கு 145 கிலோ மீற்றர் வேகத்தில் பந்து வீசுகின்றனர். பயிற்சிகளின்போது அதுபோன்ற வேகத்தில் பந்து வீசுபவர்களுக்கு முகங்கொடுப்பதே எங்களால் செய்யக்கூடுமான விடயமாகும். ஆகையால்தான், ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறவனத்திடம் இந்த வேண்டுகோளை முன்வைத்தேன்.

போட்டியின் 'பவர் பிளே' ஓவர்கள் மற்றும் கடைசிக்கட்ட ஓவர்களின்போது அதிரடியாகத் துடுப்பெடுத்தாடக் கூடிய துடுப்பாட்ட வீரர்களின் குறைபாடு காணப்படுவதுடன், உலகக் கிண்ணத் தொடருக்கு முன்பதாக இந்த குறைபாடு தீர்க்கப்பட வேண்டும்.

களத்தடுப்பாளர்களின் தலைக்கு மேலாகவும் 'ரிவர்ஸ் சுவிப்' முறையிலும் துடுப்பெடுத்தாடுவதற்கும் துடுப்பாட்ட வீரர்கள் போதுமான பயிற்சிகளை பெற வேண்டும் " என்றார்.

உலகக் கிண்ணத்துக்கு நேரடி தகுதியை பெற வேண்டும் என தசுன் ஷானக்க தெரிவித்தார்.

"சர்வேதச ஒரு நாள் போட்டித் தொடரின் புள்ளிப்பட்டியலில் முன்னிலைக்கு வந்து 2023 உலகக் கிண்ணத் தொடருக்கு நேரடியாக தகுதி பெற வேண்டும். அதற்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமானதாகும்.

மேலும், உலக இருபதுக்கு இருபது தொடருக்கான ஓர் ஆயத்தமாக தென் ஆபிரிக்க அணிக்கெதிரான இருபதுக்கு 20 தொடர் அமையும்" என்றார்.

No comments:

Post a Comment