அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று சான் டியாகோ கடற் பகுதியில் செவ்வாய்க்கிழமை வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
MH-60S என்ற ஹெலிகொப்டர், சான் டியாகோ கடற்கரையிலிருந்து சுமார் 60 கடல் மைல் தொலைவில் செவ்வாய்க்கிழமை மாலை 4:30 மணியளவில் வழக்கமான விமானப் பணிகளை மேற்கொண்டபோதே கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின்போது ஹெலிகொப்டரில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தெரியவில்லை.
ஒரு MH-60S ஹெலிகொப்டர் பொதுவாக நான்கு பேர் கொண்ட குழுவுடன் இயங்குகிறது என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும் தேடுதல் நடவடிக்கைகளில் பல கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment