சிறையிலிருந்து தப்பிய பலஸ்தீன கைதிகளின் குடும்பத்தினர் கைது - News View

Breaking

Thursday, September 9, 2021

சிறையிலிருந்து தப்பிய பலஸ்தீன கைதிகளின் குடும்பத்தினர் கைது

இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிச் சென்ற பலஸ்தீனர்களின் குறைந்தது ஐந்து குடும்ப அங்கத்தவர்களை இஸ்ரேலிய துருப்புகள் கைது செய்திருப்பதாக பலஸ்தீன கைதிகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

வடக்கு இஸ்ரேலில் உள்ள கில்போ சிறையில் இருந்து சுரங்கப்பாதை தோண்டி ஆறு பலஸ்தீன கைதிகள் கடந்த திங்கட்கிழமை தப்பிச் சென்றனர்.

இவர்களை பிடிப்பதற்கு ஆளில்லா விமானங்கள், வீதிச் சோதனைச் சாவடிகள் அமைத்திருக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தப்பிச் சென்றவர்களில் பெரும்பாலானவர்களின் சொந்த ஊரான மேற்குக் கரையின் ஜெனின் நகரில் இராணுவ சுற்றுவளைப்பு சோதனைகளையும் மேற்கொண்டு வருகிறது. 

இந்த கைதிகள் தப்பிச் செல்வதற்கு மூளையாகச் செயற்பட்டவர் என்று கூறப்படும் முஹமது அர்தாவின் இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பலஸ்தீன கைதிகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தவிர இஸ்ரேல் இராணுவத்தால் மேலும் மூன்று குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டொக்டர் நிதால் அர்தாவின் குடும்ப உறுபினர் மற்றும் தப்பிச் சென்ற மற்றொரு கைதியான முனாதல் இன்பயதாவின் தந்தை ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தப்பிச் சென்ற இந்த மூன்று கைதிகளும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பைச் சேர்ந்தவர்களாவர்.

No comments:

Post a Comment