இளைஞர், யுவதிகளுக்கு பைசர் தடுப்பூசி செலுத்துவதை நிறுத்தவும் - அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் - News View

Breaking

Thursday, September 9, 2021

இளைஞர், யுவதிகளுக்கு பைசர் தடுப்பூசி செலுத்துவதை நிறுத்தவும் - அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம்

நாட்டில் தற்போது இளைஞர், யுவதிகளுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை நிறுத்துமாறு அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

20 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு பைசர் தடுப்பூசி செலுத்துவதைத் தவிர்க்குமாறு அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த வயதினருக்கு சினோபாம் தடுப்பூசி செலுத்துவது பொருத்தமானது என்று தற்போது பரிந்துரைக்கப்பட் டுள்ளது என அந்தச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்தார்.

தற்போது கையிருப்பிலுள்ள பைசர் தடுப்பூசிகளைப் பாடசாலை மாணவர்களுக்குச் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு தாம் சுகாதார அமைச்சிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் போன்ற நிறுவனங்கள் 12 - 18 வயதான பிள்ளைகளுக்கு பைசர் தடுப்பூசி சிறந்தது என தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் மாதம் 4 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன என்றும் 12-18 வயதான மாணவர் களுக்குச் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்பால் குறித்த வயதினரே அதிகமாகப் பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள் ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment