சுற்றுலாத் துறைக்காக நாடு திறக்கப்பட வேண்டும் : ரஷ்ய, உக்ரைன் பயணிகளுக்கு பி.சி.ஆர் அவசியம் இல்லை - உதயங்க வீரதுங்க - News View

Breaking

Monday, September 13, 2021

சுற்றுலாத் துறைக்காக நாடு திறக்கப்பட வேண்டும் : ரஷ்ய, உக்ரைன் பயணிகளுக்கு பி.சி.ஆர் அவசியம் இல்லை - உதயங்க வீரதுங்க

(ஆர்.யசி)

ஒக்டோபர் மாதத்துடன் இலங்கையில் சுற்றுலாத் துறைக்காக நாடு திறக்கப்பட வேண்டும், இல்லையேல் மிக மோசமான நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும். ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கையில் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுற்றுலாத்துறை செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமான சேவைகள் நிறுவனத்தின் அதிகாரிகளின் பி.பி ஆடைகளை நீக்க வேண்டும் என சுற்றுலா அதிகரா சபையின் தலைவர் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆனாலும் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமான சேவைகள் நிறுவனத்திற்கு கட்டளையிடும் அதிகாரம் அவருக்கு இல்லை. சுற்றுலாத்துறை அதிகார சபை இவ்வாறான விடயங்களில் அனாவசியமாக செயற்படுகின்றது.

அதேபோல் சுற்றுலாத் துறையை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு தயாராக உள்ளனர்.

இந்தியா மற்றும் ஏனைய நாடுகளின் பயணிகள் போன்று அல்ல, ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதென்றால் நாட்டை முழுமையாக திறக்க வேண்டும்.

No comments:

Post a Comment