புத்தளத்தில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை - News View

About Us

About Us

Breaking

Saturday, September 11, 2021

புத்தளத்தில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை

புத்தளம் உடப்பு முகத்துவாரம் பகுதியில் இன்று அதிகாலை கடலாமை ஒன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

குறித்த கடலாமை (Olive Redly) ஒலிவ் நிற வகையைச் சார்ந்ததென புத்தளம் பிராந்திய வன ஜீவராசிகள் திணைக்கள உதவி அதிகாரி சஞ்சீவ தெரிவித்தார்.

அத்துடன் குறித்த கடலாமை 40 கிலோ எடையுடையதெனவும் புத்தளம் பிராந்திய வன ஜீவராசிகள் திணைக்கள உதவி அதிகாரி சஞ்சீவ தெரிவித்தார்.

குறித்த கடலாமையை உடற்கூற்று பரிசோதனைக்காக ஆணைவிழுந்தான் வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சில மாதங்களுக்கு முன்பாக கொழும்பு துறைமுக கடற் பரப்பிற்கு வெளியே எம்.வி. எக்ஸ்பிரஸ் கப்பல் தீப்பிடித்து எரிந்ததையடுத்து பல கடலாமைகள், டொல்பின்கள், திமிங்கலங்கள் என கடல் வாழ் உயிரினங்கள் தொடர்ந்து உயிரிழந்து கரையொதுங்கி வந்த நிலையில் இவ்வாறு கடலாமையொன்று கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment