அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சருக்கான அதிகாரங்களுடன் இலங்கை மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்கிறார் அஜித் நிவாட் கப்ரால் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 11, 2021

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சருக்கான அதிகாரங்களுடன் இலங்கை மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்கிறார் அஜித் நிவாட் கப்ரால்

இராஜதுரை ஹஷான்

இலங்கை மத்திய வங்கியின் 16 ஆவது ஆளுநராக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் எதிர்வரும் வியாழக்கிழமை (16) பதவியேற்றவுள்ளார்.

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சருக்கான அதிகாரங்களுடன் இவர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார்.

நிதி மூலதனச்சந்தை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாரட் கப்ரால் தனது பாராளுமன்ற உறுப்புரிமையினை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். இதற்கமைய இராஜினாமா கடிதத்தை திங்கட்கிழமை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கைளிக்கவுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ள்யு.டி லக்ஷ்மன் 14 ஆம் திகதி ஆளுநர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதுடன் அஜித் நிவாரட் கப்ரால் எதிர்வரும் 16 ஆம்திகதி மத்திய வங்கியின் 16 ஆவது ஆளுநராக பதவியேற்கவுள்ளார்.

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சருக்கு உள்ள அதிகாரங்களுடன் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார்.

மேலும், அஜித் நிவாட் கப்ரால் தமது பாராளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுகின்றமையினால் வெற்றிடமாகும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமைக்கு, தெரிவு செய்யப்பட இருக்கின்றவர் தொடர்பாக எந்ததொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

No comments:

Post a Comment