கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புதிய சாதனை - News View

Breaking

Thursday, September 2, 2021

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புதிய சாதனை

சர்வதேச போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரராக தற்சமயம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மாறியுள்ளார்.

2021 செப்டம்பர் முதலாம் திகதி போர்ச்சுகல், அல்கர்கேவ் மைதானத்தில் நடந்த போர்ச்சுகல் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆண்களுக்கான சர்வதேச கால்பந்து போட்டியின்போது அதிக கோல்கள் அடித்த சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

இந்த ஆட்டத்தில் அயர்லாந்துக்கு எதிராக போர்ச்சுகல் அணித் தலைவர் ரொனால்டோ தனது 110 ஆவது மற்றும் 111 ஆவது கோல்களை அடித்தார்.

இதன் மூலம் ஆண்கள் சர்வதேச கால்பந்தில் அதிக கோல்கள் அடித்த வீரராக காணப்பட்ட ஈரானிய அலி டாய்யின் (109 கோல்) முறியடிக்கப்பட்டது.

அவருக்கு அடுத்தபடியாக சர்வதேச போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ஈரானின் அலி டாய் (109), மலேசியாவின் மொக்தர் தஹாரி (89), ஹங்கேரியின் ஃபெரென் புஸ்காஸ் (84), ஜாம்பியாவின் கோட்ஃப்ரே சிடலு (79), ஈராக்கின் ஹுசைன் சயீத் (78), பிரேசிலின் பெலே (77), லியோனல் மெஸ்ஸி (76) முறையே தங்களுக்கான இடங்களை பிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment