நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை, விலையேற்றமும் இடம்பெறவில்லை : தேசிய மருந்தாக்கல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு - News View

Breaking

Thursday, September 2, 2021

நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை, விலையேற்றமும் இடம்பெறவில்லை : தேசிய மருந்தாக்கல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு

(ஆர்.யசி)

கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாடு நெருக்கடி நிலைமைகளை எதிர்கொண்ட போதிலும் மக்களுக்கான அத்தியாவசிய மற்றும் மிக முக்கிய மருந்துகள் தட்டுப்பாடு நிலவவில்லை எனவும், நாட்டில் பயன்படுத்தப்படும் 1,200 மருந்துகளில் வெறுமனே 25 மருந்துகள் மாத்திரமே பற்றாக்குறை நிலவுவாகாதாகும். தேசிய மருந்தாக்கல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

கொவிட் நிலைமைக்குகளுக்கு மத்தியில் நாட்டின் அத்தியாவசிய உணவுகள் உற்பட அவசியமான மருந்துகளிலும் தட்டுப்பாடுகள் நிலவுவதாக எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பலர் தெரிவித்துள்ள நிலையில் உண்மை நிலைமை குறித்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டில் பொதுவாக 800 தொடக்கம் 1,200 வகையான மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய மருந்துகள் தொடர்ந்தும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதில் தடைகள் விதிக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கையில் இந்த மருந்துகளில் அத்தியாவசிய மருந்துகள் மட்டுமே மிக அவசரமாக பயன்படுத்த வேண்டிய மருந்துகள் சகலதும் இப்போது எம்மிடம் கைவசம் உள்ளன.

இந்த 1,200 மருந்துகளில் 25 க்கும் குறைந்த மருந்துகளில் தட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. இந்த மருந்துகள் கூட அத்தியாவசியமானவை அல்ல, இவற்றுக்கு மாற்றீடாக வேறு மருந்துகள் பயன்படுத்த முடியும். அவை எம்மிடம் கைவசம் உள்ளன. எனவே மக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

அதுமட்டுமல்ல தற்போது மருந்து பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்ற போதிலும் அவ்வாறு எந்த விலையேற்றமும் அண்மைக் காலத்தில் இடம்பெறவில்லை. கடந்த 2020 ஆம் ஆண்டின் அதே விலைப்பட்டியல் இன்று வரை கடைப்பிடிக்கப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment