கொரோனா தடுப்பூசி பெறும் வழக்கில் சிறுவனுக்கு வெற்றி - News View

About Us

About Us

Breaking

Saturday, September 25, 2021

கொரோனா தடுப்பூசி பெறும் வழக்கில் சிறுவனுக்கு வெற்றி

நெதர்லாந்தின் 12 வயது சிறுவன் ஒருவன் கொவிட்-19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பெறுவதற்கு நீதிமன்றத்தில் முன்னெடுத்த சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதற்கு அந்த சிறுவனின் தந்தை எதிர்ப்பை வெளியிட்டபோதும் உயிரிழக்கும் தறுவாயில் உள்ள தனது பாட்டியை காணச் செல்வதற்காகவே தடுப்பூசி பெற அனுமதி கேட்டு வழங்குத் தொடுத்துள்ளான்.

புற்றுநோயின் உச்சத்தை எட்டி இருக்கும் அவனது பாட்டிக்கு அவன் மூலம் எந்தவொரு வைரஸ் தொற்றும் பரவுவதை தடுப்பூசி தடுக்கும் என்று நீதிபதியின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நெதர்லாந்தில் 12 தொடக்கம் 17 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டபோதும் 17 வயதுக்கு குறைந்தவர்களுக்கு தடுப்பூசி பெற பெற்றோர்களின் அனுமதி தேவையாக உள்ளது.

எனினும் தடுப்பூசி பற்றிய சந்தேகங்கள் நெதர்லாந்தில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த சிறுவனுக்கு உடன் தடுப்பூசி போட வேண்டும் என்றும் தந்தையின் கவலையை விட அவனது ஆர்வம் முக்கியமானது என்றும் கிரோனிங்கன் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி பார்ட் ட்ரொம்ப் குறிப்பிட்டார்.

அந்த சிறுவன் அதிக நேரம் தனது பாட்டியுடன் செலவிட விரும்புவதாக கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment