நாட்டுக்குள் இன்னொரு திரிபு வர வாய்ப்புள்ளது என்கிறார் சுதர்ஷனி - News View

Breaking

Thursday, September 9, 2021

நாட்டுக்குள் இன்னொரு திரிபு வர வாய்ப்புள்ளது என்கிறார் சுதர்ஷனி

அமுல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளின் மூலம் கொரோனா திரிபை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும், மற்றொரு திரிபு நாட்டுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார்.

இந்நிலையில், மக்கள் கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே வலியுறுத்தினார்.

அத்துடன் இந்த சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுவதை விடுத்து, அரசியல் பேதங்களை மறந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

No comments:

Post a Comment