லொகான் ரத்வத்தவை பதவி நீக்குவது மட்டுமல்ல உடனடியாக கைது செய்து உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 15, 2021

லொகான் ரத்வத்தவை பதவி நீக்குவது மட்டுமல்ல உடனடியாக கைது செய்து உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

(ஆர்.யசி)

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் கைத்துப்பாக்கியுடன் உட்புகுந்து தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தவின் பதவி நீக்குவது மட்டுமல்ல உடனடியாக கைது செய்து உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

விடுமுறை கொண்டாட்டம் ஒன்றிற்காக நண்பர்கள் சகிதம் சென்ற சிறைச்சாலைகள் நிர்வாகம் கைதிகள் புனர்வாழ்வுக்குப் பொறுப்பான, இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தைக்கு எமது தமிழ் அரசியல் கைதிகளை விளையாட்டு பொம்மைகளாக பயன்படுத்த அந்த சிறைச்சாலை அதிகாரி அனுமதி வழங்கியுள்ளார்.

அதனால் இரு அரசியல் கைதிகளை தன் முன்நிலையில் முழங்காலிட வைத்த இராஜாங்க அமைச்சர் அவர்களது தலையில் கைத்துப்பாக்கியை வைத்துள்ளார்.

இந்த நாட்டில் சிறைச்சாலை அட்டூழியம் ஒன்றும் புதிதல்ல, அதனை எந்த அரசும் காலம் காலமாக மேற்கொண்டே வந்துள்ளன. இதன் வெளிப்பாடாகவே அமைச்சர் மதுபோதையில் துப்பாக்கியுடன் சிறைச்சாலைக்குள் சென்று கைதிகள் மீது துப்பாக்கியை வைத்த அமைச்சரையும் அவரது கூட்டத்தையும் கைது செய்வதற்கு பதிலாக அதிகாரிகளும் காவலர்களும் அமைச்சருக்கு சாமரம் வீசுவதில் கவனம் செலுத்தினரா என்ற ஐயமும் எழுகின்றது.

ஐ.நா மனித உரிமை பேரவை அமர்வு ஆரம்பமாகியுள்ள நேரத்தில் திட்டமிட்ட வகையில் குழப்பத்தை ஏற்படுத்தி திசை திருப்பும் முயற்சியா என்ற சந்தேகமும் எழுவதனால் குறித்த அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதோடு இதற்கு துணைபோன அதிகாரிகள், ஆயுதங்களுடன் உட் செல்ல அனுமதித்த காவலர்களும் கைது செய்யப்பட வேண்டும். உரிய விசாரணைகளை முன்னெடுத்து தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment