விவசாய அமைச்சரும், வர்த்தக அமைச்சரும் பதவிகளிலிருந்து விலகி அரிசியாலை உரிமையாளர்களுக்கு அதிகாரத்தை வழங்குங்கள் - ஹர்ஷ டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Thursday, September 30, 2021

விவசாய அமைச்சரும், வர்த்தக அமைச்சரும் பதவிகளிலிருந்து விலகி அரிசியாலை உரிமையாளர்களுக்கு அதிகாரத்தை வழங்குங்கள் - ஹர்ஷ டி சில்வா

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரிசி விலையை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் இருக்கும் விவசாய அமைச்சரும், வர்த்தக அமைச்சரும் தங்கள் பதவிகளில் இருந்து விலகி, அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும். நாட்டில் அரசாங்கம் ஒன்று இருக்கையில் அரிசிக்கான விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை அரிசி ஆலை உரிமையாளர்கள் கையில் எடுத்திருப்பது குறித்து அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் என ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.

அரிசிக்கான நிர்ணய விலையை அரசாங்கம் நீக்கிக் கொண்டதை தொடர்ந்து, பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசிக்கான விலை நிர்ணயம் செய்திருப்பது குறித்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் அரிசிக்கான விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பாரிய பிரச்சினை ஏற்படும் என நாங்கள் ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்தோம்.

தற்போது அரசாங்கம் விலை நிர்ணய வர்த்தமானி அறிவிப்பை நீக்கிக் கொண்டுள்ளது. இருந்த போதும் தற்போது காலம் கடந்து விட்டது. அரசாங்கத்தின் திட்டமிடல் இல்லாத நடவடிக்கையால் சாதாரண மக்களே பாதிக்கப்படப்போகின்றனர்.

மேலும் 100 ரூபாவுக்கு அதிகம் அரிசி விலை அதிகரிக்க மாட்டோம். வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய மாட்டோம் என அரசாங்கம் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தது. தற்போது என்ன நடந்திருக்கின்றது.

பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் வர்த்தக சந்தையை முழுமையாக தங்களின் கைகளில் வைத்துக் கொண்டிருப்பது தெளிவாகின்றது என்றார்.

No comments:

Post a Comment