இலங்கையில் இளம் பெண் வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரி வைத்தியசாலையில் பணியாற்றி வந்த 31 வயதான தரிந்தி டில்சிகா என்ற இளம் பெண் வைத்தியரே இவ்வாறு கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் வைத்தியர் கடந்த 2 ஆம் திகதி கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில், காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவல் ஆரம்பமாகிய காலம் முதல் இதுவரை 7 வைத்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment