அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிடம் பொதுபலசேனா அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, September 24, 2021

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிடம் பொதுபலசேனா அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை

(நா.தனுஜா)

ஒரு விடயத்தை பிறிதொரு விடயமாகத் திரிபுபடுத்தும் போக்கிலிருந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விலகிக் கொள்ள வேண்டும். நாம் அல்குர்ஆனில் உள்ள ஏதேனுமொரு விடயத்தைக் கூறினால், அது மக்காவிலோ அல்லது மதினாவிலோ அருளப்பட்டது என்று கூறி அதிலிருந்து விடுபட்டுக் கொள்கின்றீர்கள். ஆனால் உங்களுக்கென ஏதேனுமொரு மத ரீதியான உரிமையைப் பெற்றுக் கொள்வதற்காக அதனைப் பயன்படுத்துகின்றீர்கள். ஆகையினால் இத்தகைய இரட்டை நிலைப்பாட்டிலிருந்து விலகி, உறுதியானதொரு நிலைப்பாட்டை எடுங்கள் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிடம் பொதுபலசேனா அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கின்றது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் அர்கம் நுராமித்தினால் கையெழுத்திடப்பட்டு கடந்த 22 ஆம் திகதி அனுப்பப்பட்டிருந்த கடிதத்திற்கு வெள்ளிக்கிழமை பொதுபலசேனா அமைப்பின் ஊடகப் பிரிவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதில் கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, 'ஒரு விடயத்தை பிறிதொரு விடயமாகத் திரிபுபடுத்தும் போக்கிலிருந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விலகிக் கொள்ள வேண்டும்.

இனியும் உங்களால் மக்களை ஏமாற்ற முடியாது. நாம் அல்குர்ஆனில் உள்ள ஏதேனுமொரு விடயத்தைக் கூறினால், அது மக்காவிலோ அல்லது மதினாவிலோ அருளப்பட்டது என்று கூறி அதிலிருந்து விடுபட்டுக் கொள்கின்றீர்கள். ஆனால் உங்களுக்கென ஏதேனுமொரு மத ரீதியான உரிமையைப் பெற்றுக் கொள்வதற்காக அதனைப் பயன்படுத்துகின்றீர்கள்.

ஆகையினால் இத்தகைய இரட்டை நிலைப்பாட்டிலிருந்து விலகி, உறுதியானதொரு நிலைப்பாட்டை எடுங்கள்' என்றும் பொதுபலசேனா அமைப்பு அக்கடிதத்தின் ஊடாகக் கோரிக்கை விடுத்திருக்கின்றது.

No comments:

Post a Comment