தமிழ் நாட்டு புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம் - News View

Breaking

Thursday, September 9, 2021

தமிழ் நாட்டு புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்

தமிழகத்தின் புதிய ஆளுநராக ரவீந்திர நாராயணன் ரவி நியமிக்கப்பட்டிருக்கிறார். 

ஆளுநராக பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தமிழக ஆளுநராக பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோகித், தற்போது பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 

இதைத் தொடர்ந்து நாகாலாந்து மாநில ஆளுநராக பணியாற்றிவந்த ஆர்.என். ரவி தற்போது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்கவிருக்கும் ரவீந்திர நாராயணன் ரவி பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். 

1976ஆம் ஆண்டு முதல் கேரள மாநிலத்திலா காவல்துறை அதிகாரியாக பணியாற்றியவர். 

கடந்த 2010ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் நாகாலாந்து மாநில ஆளுநராக பொறுப்பு வகித்து வந்தார்.

தமிழகத்தின் புதிய கவர்னராக பொறுப்பேற்க இருக்கும் ஆர்.என். ரவி அவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

இதனிடையே புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக முன்னாள் காவல்துறை அதிகாரியான கிரண் பேடி பொறுப்பேற்றுக் கொண்டு, அங்கு ஆட்சி நடை மாற்றம் நடைபெற காரணமாக இருந்தார். 

அதேபோல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னாள் காவல்துறை உயரதிகாரியான ஆர்.என். ரவி அவர்களை மத்திய அரசு பரிந்துரை மற்றும் ஆதரவுடன் குடியரசுத் தலைவர் நியமித்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment