நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் துறைசார்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின் போதே இத்தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் பரப்பப்படும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பெருமளவு நபர்கள் தடுப்பூசியை நிராகரித்து வருகின்றமை தொடர்பில் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோர் பெருமளவில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் மட்டும் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசியை இதுவரை பெற்றுக் கொள்ளவில்லை என்றும் அவ் அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட 3,900 பேரும் கண்டி மாவட்டத்தில் 7000 ற்கும் அதிகமானோரும் இதுவரை தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை என்றும் அதேவேளை, அம்பாறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment