அவசரகால சட்டத்தை பயன்படுத்துவது ஒருபோதும் ஜனநாயக விரோத செயற்பாடாகாது - அமைச்சர் வாசுதேவ - News View

About Us

About Us

Breaking

Monday, September 6, 2021

அவசரகால சட்டத்தை பயன்படுத்துவது ஒருபோதும் ஜனநாயக விரோத செயற்பாடாகாது - அமைச்சர் வாசுதேவ

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல்களை தடுக்க அவசரகால சட்டத்தை பயன்படுத்துவது ஒருபோதும் ஜனநாயக விரோத செயற்பாடாகாது. இது ஜனாநாயக செயற்பாடு என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதகான அவசரகால நிலைமைகள் குறித்த ஒழுங்குவிதிகள் மீதான விவாதம் இன்று (6) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அதேபோல் தற்போது இடம்பெறுவது வியாபார மாபியா அல்ல, வியாபார பயங்கரவாதம். இதனை அவசரகால சட்டத்தின் மூலமாகவே தடுக்க முடியும். அதனையே ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றார் எனவும் அமைச்சர் கூறினார்.

நாட்டின் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் பதுக்கல் நிலையை தடுக்க சாதாரண சட்டத்தை கையாள முடியும் என எதிர்கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

சாதாரண சட்டத்தில் இதனை கையாள நடவடிக்கை எடுத்தால் காலம் கடக்கும். நீதிமன்றங்களை நாடி இறுதியாக தீர்ப்பு ஒன்று கிடைக்கும் வரைக்கும் மக்கள் அதிக விலையில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய நேரிடும்.

அதேபோல் அவசரகால சட்டமானது அத்தியாவசியப் பொருட்களின் பதுக்கல், ஊழலுக்கு எதிராக மட்டுமே கையாளப்படும். வேறு எந்த காரணத்திற்கும் இது கையாலப்படாது என ஜனாதிபதியே வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். ஆகவே எக்காரணம் கொண்டும் இதனை பயன்படுத்தி ஜனநாயக அடக்குமுறை கையாலப்படாது.

அதேபோல் அவசரகால சட்டம் ஜனநாயக எதிர்ப்பு வேலைத்திட்டம் என எதிர்கட்சிகள் கூறுகின்றனர். ஆனால் இது ஜனநாயக விரோத செயற்பாடு அல்ல. மக்களின் அத்தியாவசிய பொருட்களை பத்துக்கும், மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும், நெல் ஆலைகளை வைத்துக் கொண்டு அரிசி ஊழலில் ஈடுபடும், ஒரு சில வியாபார மாபியாகாரர்களின் செயற்பாடுகளை தடுத்து மக்களுக்கான நுகர்வுப்பொருட்களை பெற்றுக் கொடுக்க எடுக்கும் செயற்பாடு ஆகும்.

ஒருபோதும் ஜனநாயக விரோத செயற்பாடாகாது. எனவே அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தியமை ஜனநாயக செயற்பாடாகும் எனவும் அவர் கூறனார்.

No comments:

Post a Comment