ஸ்பெயின் எரிமலையில் தப்பியுள்ள அதிசய வீடு - News View

About Us

About Us

Breaking

Sunday, September 26, 2021

ஸ்பெயின் எரிமலையில் தப்பியுள்ள அதிசய வீடு

ஸ்பெயினின் கனேரி தீவுகளில் தொடர்ந்து எரிமலை வெடித்து வரும் நிலையில் அதன் எரிமலைக் குழம்பில் இருந்து அசாதாரணமான முறையில் தப்பித்த வீடு ஒன்றின் புகைப்படம் பிரபலமடைந்துள்ளது.

லா பல்மாவில் இருக்கும் இந்த வீட்டை மக்கள் ‘அதிசய வீடு’ என்று சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையே எரிமலை வெடிக்க ஆரம்பித்தது. இதுவரை 200 க்கும் அதிகமான வீடுகள் அழிந்திருப்பதோடு சுமார் 6,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கும்ப்ரே வீஜா எரிமலையில் இருந்து கொட்டும் எரிமலைக் குழம்பு தொடர்ந்து நகர்ந்து வருகிறது. இந்த எரிமலை வெடிப்பு இன்னும் எத்தனை நாள் நீடிக்கும் என்பது பற்றி விஞ்ஞானிகளால் உறுதி செய்ய முடியாதுள்ளது.

அல்பொன்சோ எஸ்கெலேரோ என்ற புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட படத்தில் எரிமலைக் குழும் வீட்டை சுற்றி ஓட நடுவே அந்த வீடு எந்தப் பாதிப்பும் இன்றி காணப்படுகிறது.

இந்த வீடு ஓய்வு பெற்ற டென்மார்க் தம்பதிகளுக்கு சொந்தமானதாகும்.

அவர்கள் கொரோனா தொற்று ஆரம்பித்தது தொடக்கம் அங்கு செல்லவில்லை.

எரிமலைக் குழம்பினால் வீடுகள், பாடசாலைகள் மற்றும் வாழைத்தோட்டங்களும் மூழ்கியுள்ளன.

No comments:

Post a Comment