ஓய்வு பெற்றார் புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர் மைக்கேல் ஹோல்டிங் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 16, 2021

ஓய்வு பெற்றார் புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர் மைக்கேல் ஹோல்டிங்

முப்பது ஆண்டுகளுக்கு மேலான தனது புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனை பணியிலிருந்து மைக்கேல் ஹோல்டிங் ஓய்வு பெற்றுள்ளார்.

67 வயதான ஹோல்டிங் 1975 - 1987 வரையான காலப் பகுதியில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக 391 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கிரிக்கெட் உலகில் 'விஸ்பரிங் டெத்' என்ற புனைப்பெயர் பெற்ற ஹோல்டிங் ஜமைக்கா வரலாற்றில் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

அவர் 1988 இல் கரீபியனில் தனது கிரிக்கெட் வர்ணனை வாழ்க்கையைத் தொடங்கியதுடன், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஸ்கை ஸ்போர்ட்ஸ் வர்ணனை குழுவின் ஒரு பகுதியாக இருந்து வந்தார்.

கிரிக்கெட் வாழ்விலிருந்து விலகிய ஹோல்டிங், சமீபத்தில் தனது இனவெறி எதிர்ப்பு பிரச்சாரத்திற்காக பாராட்டையும் அனைவரது கவனத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment