நிபுணத்துவ குழுவொன்றின் வழிகாட்டலுடன் பாடசாலைகளை படிப்படியாக ஆரம்பிக்கலாம், மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் - பேராசிரியர் அர்ஜுன த சில்வா - News View

About Us

About Us

Breaking

Thursday, September 9, 2021

நிபுணத்துவ குழுவொன்றின் வழிகாட்டலுடன் பாடசாலைகளை படிப்படியாக ஆரம்பிக்கலாம், மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் - பேராசிரியர் அர்ஜுன த சில்வா



(எம்.ஆர்.எம்.வசீம்)

நாடு திறக்கப்பட்ட பின்னர் நிபுணத்துவ குழுவொன்றின் வழிகாட்டலுடன் பாடசாலைகளை படிப்படியாக ஆரம்பிக்க முடியுமாகும். அதற்காக மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என ராகம வைத்தியபீட சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன த சில்வா தெரிவித்தார்.

நாடு திறக்கப்பட்டதன் பின்னர் பாடசாலைகளை ஆரம்பிக்க முடியுமான சாத்தியம் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தொற்றாளர்கள் இனம் காண்பது ஓரளவு கட்டுப்பாட்டுக்கு வந்த பின்னர் நாட்டை கடுமையான சுகாதார நிபந்தனைகளுடன் திறப்பதற்கு முடியும். அதன் பிரகாரம் நாடு திறக்கப்பட்ட பின்னர் பாடசாலைகளையும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

மேலும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொடுப்பது முக்கியமாகும். உயர்தர வகுப்பில் இருந்து கீழ் வகுப்பு வரை படிப்படியாக தடுப்பூசி ஏற்றப்படவேண்டும். அதன் பின்னர் பாடசாலைகளை நிபுணத்துவம் கொண்ட குழுவொன்றின் வழிகாட்டலின் கீழ் படிப்படியாக மீண்டும் ஆரம்பிப்பதற்கு முடியுமாகும்.

அத்துடன் டெல்டா வீரயம் கொண்ட கொராரோனா அலை அடுத்த மாதம் ஆகும்போது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கின்றோம்.

கொராரோனா பரவல் தொடர்பான தரவுகளை ஆய்வு செய்த பின்னர் நாட்டை மீண்டும் திறப்பது தொடர்பில் தெளிவானதொரு தீர்மானத்துக்கு வர முடியுமாகும்.

நாட்டு மக்கள் சனத் தொகையில் நூற்றுக்கு 85 வீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றிய பின்னர் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி கட்டியெழுப்பப்பட்டு, கொவிட் பரவலின் குறிப்பிடத்தக்களவில் கட்டுப்பாடு ஏற்படும். அந்த 85 வீத எல்லைக்கு வந்து இரண்டு வாரங்களின் பின்னர் அதன் பெறுபேற்றை காட்டக்கூடும்.

எனவே நாடு சாதாணர நிலைமைக்கு வந்தாலும் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் ஒரு சிலரின் நடவடிக்கைகள் கவலைக்குரியதாகவே இருந்தன. தடுப்பூசி ஏற்றிக் கொள்வதற்கு வரும் இடங்களிலும் மக்கள் சுகாதார வழிமுறைக்கமைய செற்படவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment