கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்தது வட கொரியா - News View

Breaking

Wednesday, September 15, 2021

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்தது வட கொரியா

வட கொரியா தனது கிழக்கு கடற்கரையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஒரு ஜோடி பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக தென் கொரியா புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய வட கொரியாவின் ஒரு தளத்தில் இருந்து ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் புதன்கிழமை பிற்பகல் கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரை பரப்பை நோக்கி பறந்து சென்றதாக தென் கொரியாவின் கூட்டுத் தலைவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

அணுசக்தி திறன் கொண்ட ஒரு ஏவுகணையை பரிசோதித்த சில நாட்களுக்குப் பிறகு வட கொரிய இந்த ஏவுகணை பரிசோதனையினை மேற்கொண்டுள்ளதுடன், பதற்றத்தையும் அதிகரித்துள்ளது.

பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகள் வட கொரியாவின் அணுசக்தி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வடிவமைக்கப்பட்ட ஐ.நா.வின் தீர்மானங்களை மீறுவதாக அமைந்துள்ளன.

No comments:

Post a Comment