புத்தளம் உடப்பு கடற்கரையில் கரையொதுங்கிய டொல்பின்கள் - News View

Breaking

Monday, September 6, 2021

புத்தளம் உடப்பு கடற்கரையில் கரையொதுங்கிய டொல்பின்கள்

புத்தளம் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூனைப்பிட்டி கடற்கரையோரத்தில் இரண்டு டொல்பின்கள் உயிருடன் கரை ஒதுங்கியதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) மாலை 4.30 மணியளவில் இரண்டு டொல்பின்கள் உயிருடன் கரையொதுங்கியதாக பிரதேச மீனவர்கள் கடற்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து அங்கு சென்ற கடற்படையினர் பிரதேச மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் அந்த இரண்டு டொல்பின்களையும் கடலுக்குள் விட்டனர்.

சுமார் எட்டு மற்றும் ஆறு அடி நீளம் கொண்ட இரண்டு டொல்பின்களே இவ்வாறு கரையொதுங்கியதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment