(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
அநுராதபுர சிறைச்சாலைக்கு பலவந்தமாக சென்று தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய விடயம் தொடர்பில் சர்வதேசத்துக்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி ஐக்கிய நாடுகளுக்கு சென்று ஒன்றை தெரிவிக்கின்றார். அரச தப்பினர் இங்கு அதற்கு மாற்றமான கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இதுதான் இந்த அரசாங்கத்தின் நிலைமை.
அநுராதபுர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் பாரிய தவறு. இதற்கு சர்வதேசத்துக்கு பதில் சொல்ல வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறான பல சம்பவங்கள் இங்கு இடம்பெற்றிருக்கின்றன. 1983 கறுப்பு ஜூலை தொடர்பாக கதைக்கின்றனர். அதற்கு நாங்கள் எதிர்ப்பு. அதனை நாங்கள் இன்றைக்கும் கண்டிக்கின்றாேம்.
மேலும் 83 இல் இடம்பெற்றதை போல்தான் அன்று அனுராதபுர சிறைச்சாலைக்கு ராஜாங்க அமைச்சர் பலவந்தமாக சென்று, துப்பாக்கி காட்டி அச்சுறுத்தி இருக்கின்றார். இது இனவாத பிரச்சினை அல்ல.
அனுராதபுர சிறைச்சாலைக்கு நாங்கள் சென்றோம். என்னுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்த்தன மற்றும் ராேஹன பண்டாரவும் வந்திருந்தனர். அதனால் இந்த பிரச்சினைக்கு சர்வதேசத்துக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கின்றது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பல விசாரணைகள் இடம்பெறுவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருக்கின்றார். அவ்வாறு தேவையில்லை. இது 83 கலவரம்போன்றதோ, திகன சம்பவம் போன்றதொன்று அல்ல. இது தெளிவாகவே இராஜாங்க அமைச்சர் துப்பாக்கியை நீட்டி தமிழ் சிறைக் கைதிகளை கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் மனித உரிமை மிறப்பட்டிருப்பது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக, யுத்தம் முடிந்து சில தினங்களிலேயே மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் தெரிவித்திருந்தது. அதனை செய்ய தவறியதாலே இந்த பிரச்சினை இன்னும் இருந்து வருகின்றது. இது நாங்கள் ஏற்படுத்தியதொன்று அல்ல. நீங்கள் செய்த தவறு.
அதனால் தற்போதாவது சிறையில் இருக்கும் தமிழ் சிறைக் கைதிகளை விடுதலை செய்து சர்வதேசத்திடம் நற்பெயரை பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment