மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு - News View

Breaking

Tuesday, September 14, 2021

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழ்நாட்டில் அடுத்த மாத தொடக்கத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களவை இரண்டு இடங்களுக்கான தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களாக டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என். ராஜேஷ்குமார் ஆகியோரை அறிவித்துள்ளது அக்கட்சித்தலைமை.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் இருந்த கே.பி. முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து கடந்த மே 7-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியை ராஜிநாமா செய்தனர்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடுமத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ,மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இரு மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலுக்கு திமுக வேட்பாளர்களாக நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளராக இருக்கும் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் மற்றும் பேரவை தேர்தலில் சென்னை தி.நகர் தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி சோமு ஆகியோர் போட்டியிடுவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15ஆம் தேதியான இன்று தொடங்கியுள்ளது. தற்போதுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில், திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள இருவரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment