ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பு - News View

About Us

About Us

Breaking

Monday, September 13, 2021

ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பு

(ஆர்.யசி)

இலங்கை அரசாங்கம் மனித உரிமை பேரவையோடு இணங்கிச் செயற்படும் என ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதியை செயலில் காண வேண்டும் என மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வலியுறுத்தியுள்ளதை கவனத்தில் கொண்டுள்ளதாக தெரிவிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் வெளியிடப்பட்ட மனித உரிமை உயர் ஸ்தானிகரின் இலங்கை சம்பந்தமான வாய்மூல முன்னேற்ற அறிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் விடயங்கள் தொடர்பிலான தீர்மானமானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 வது கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது,

அதற்கமைய இலங்கை அரசாங்கத்தின் முன்னேற்ற நகர்வுகள் குறித்த வாய்மூல முன்னேற்ற அறிக்கையினை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பட்செல் நேற்று முன்வைத்திருந்தார்.

இந்த அறிக்கை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை இன்று வெளிப்படுத்தியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவிக்கையில்,

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் வெளியிடப்பட்ட மனித உரிமை உயர் ஸ்தாணிகரின் இலங்கை சம்பந்தமான வாய் மூல முன்னேற்ற அறிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது.

விசேடமாக, அரசாங்கம் மனித உரிமை பேரவையோடு இணங்கிச் செயற்படும் என்று ஜனாதிபதி கொடுத்த உத்தரவாதத்தை செயலில் காண வேண்டும் என்று வலியுறுத்தியள்ளதை நாம் அவதானித்துள்ளோம்.

இலங்கையில் அண்மையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசர காலச் சட்டத்தையும், வேறு சட்ட ஆட்சிக்கு முரணான விடயங்களையும் சுட்டிக் காட்டியதையும் வரவேற்கிறோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி சம்பந்தமான திடமான நிலைப்பாட்டுக்காக நன்றி செலுத்துகிறோம்.

அதேபோல், சாட்சியங்களை சேகரித்தல் மற்றும் பாதுகாத்தலுக்கான பொறிமுறை ஏற்படுத்துவது சம்பந்தமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் விரைவில் நிறைவுறும் என்று எதிர்பார்க்கிறோம் எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment